இந்த வழிகாட்டி நூல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV மற்றும் VAO தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் தேர்வர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்வர் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களுக்குத் தேவையான தெளிவையும் கருத்தில் கொண்டு இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மற்றும் முக்கியமான பாடக் கருத்துக்களை எளிமையாகவும், வரிசைக்கிரமமாகவும் தேர்வர்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இந்தப் புத்தகத்தின் முதன்மை நோக்கமாகும்.
இப்புத்தகம் கடினமான வரலாற்றுத் தகவல்கள், அறிவியல் கோட்பாடுகள் மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றை மிக எளிய தமிழில் அனைவரும் புரியும் வகையில் விளக்கியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு வரலாறு, பண்பாடு மற்றும் சங்க கால இலக்கியங்கள் தொடர்பான பகுதிகளில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
TNPSC ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV மற்றும் VAO-ன் தற்போதைய பாடத்திட்டத்தை முழுமையாகப் பின்பற்றி, சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் சாராம்சத்தைச் சேர்த்து இது தொகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் மாதிரி வினாக்கள் கொள்குறிவகை வினாக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் முந்தைய ஆண்டுகளுக்கான TNPSC வினாத்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தங்களை TNPSC தேர்வுக்கு பயிற்சி செய்து கொள்ள டாண் மாதிரி வினாத்தாள் OMR Sheet கொடுக்கப்பட்டுள்ளது.
நேரத்தைச் சேமிக்கும் வகையிலும், படிப்பதற்கு சலிப்பு ஏற்படாத வகையிலும் ஒரு ‘நண்பனைப் போல’ இந்த நூல் உங்களுக்கு வழிகாட்டும். இந்த வழிகாட்டி உங்கள் கடின உழைப்பிற்கு ஒரு கருவியாக அமைந்து, நீங்கள் அரசு அதிகாரியாக உருவெடுக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!





Reviews
There are no reviews yet.